இராமநாதபுரம்

கீழக்கரையில் இரட்டை விழா: காலையில் போதை ஒழிப்பு கைப்பந்து, மாலையில் நூல் பாராட்டு விழா

கீழக்கரையில் இரட்டை விழா: காலையில் போதை ஒழிப்பு கைப்பந்து, மாலையில் நூல் பாராட்டு விழா

இராமநாதபுரம்,ஆக.17-
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மருதநாயகம் விளையாட்டு குழுமம் சார்பில் ஆகஸ்ட் 16 அன்று போதை விழிப்புணர்வு கைப்பந்து போட்டியும், இலக்கிய நிகழ்வான நூல் பாராட்டு விழாவும் என இரட்டை சிறப்பு நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெற்றன.

காலையில் போதை விழிப்புணர்வு மாபெரும் கைப்பந்து போட்டி
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கீழக்கரை மேலத்தெரு ஹமீதியா பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாபெரும் கைப்பந்து போட்டி நடத்தப்பட்டது.

இப்போட்டியில் 25 அணிகள் கலந்து கொண்டன. இறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் சுழல் கோப்பைகள் வழங்கப்பட்டன.
முதல் பரிசு – ரூ.10,000 ஏர்வாடி பகிர் பிரதர்ஸ் அணி. பரிசை வழங்கியவர் சாகுல் ஹமீது,இரண்டாம் பரிசு – ரூ.7,500 மருதநாயகம் விளையாட்டு அணி. பரிசை வழங்கியவர் ராவிப் ஸ்வீட் ஹவுஸ் ,மூன்றாம் பரிசு – ரூ.5,000 மாயகுளம் அணி. பரிசை வழங்கியவர் முகம்மது யூசுப் பரிசுகளை மருதநாயகம் விளையாட்டு குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹக்கீம் மற்றும் அதிமுக சிறுபான்மையினர் நல பிரிவின் மாவட்டத் துணைச் செயலாளர் ஹபிப் நெய்ணா ஆகியோர் வழங்கி வாழ்தினர் மாலை”வாழ்கையெனும் நிகழ்வின் கீறல்கள்” நூல் பாராட்டு விழா
இளங்கவிஞர் கோ. ஜீவா அவர்களின் “வாழ்க்கையெனும் நிகழ்வின் கீறல்கள்” என்ற நூலுக்கான பாராட்டு விழா மாலையில் நடைபெற்றது. விளையாட்டு மூலம் சமூக விழிப்புணர்வும், இலக்கியம் மூலம் கலை வளர்சியும் என கீழக்கரையில் ஒரே நாளில் இரு வேறு தளங்களில் நடந்த இந்நிகழ்வுகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button