கீழக்கரையில் “வாழ்க்கை எனும் நிகழ்வின் கீறல்கள்” நூல் வெளியீடு

கீழக்கரையில் “வாழ்க்கை எனும் நிகழ்வின் கீறல்கள்” நூல் வெளியீடு

அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவின் மாவட்ட துணைச் செயலாளர் எஸ் எஸ் ஹபீப் நெய்ணா ஏற்பாட்டில் நடைபெற்றது,
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா பள்ளி விளையாட்டு மைதானத்தில், மருதநாயகம் குழுமம் சார்பில் நடைபெற்ற சிறப்பு விழாவில், கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவரும் இளங்கவிஞருமான கவி_கோ ஜீவா எழுதிய “வாழ்கை எனும் நிகழ்வின் கீறல்கள்” என்ற நூல் வெளியிடப்பட்டது.
இந்நூலை கீழக்கரை மேலத்தெரு உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்கத்தின் நிர்வாகி சுலைமான், 18 வாலிபர்கள் ஜகாத் கமிட்டி செயலாளர் சாகுல் ஹமீது மற்றும் கீழக்கரை DS7 நிறுவனத்தின் உரிமையாளர் ஆகியோர் பெற்றுக்கொண்டு, இளங்கவிஞர் கவி_கோ ஜீவாவிற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவின் மாவட்ட துணைச் செயலாளர் எஸ் எஸ் ஹபீப் நெய்ணா ஏற்பாட்டில் நடைபெற்றது,




