அம்மா கலிமா பீவீ.
அம்மா
கலிமா பீவீ..
என்னை ஈன்ற
எந்தன் தாயே
உந்தன்
பெருமை
தெரியாதா.
வறுமை உன்னை
வாட்டிய
போதும் நீ
என்னை
வளர்த்த
விதம் புரியாதா…
கண்ணின்
இமையாய் நீ
இருந்தாய்.
கருத்தாய்
தினமும் நீ
வளர்த்தாய்.
நீ
வயல்
வெளியில்
உழைத்தாலும்
உன்
கழுத்தை
பற்றித்தான்
நான்
வளர்ந்தேன்.
தண்ணீர் குடம்
உன்
தலைதனிலே…
உன்
தவப்புதல்வன்
நான் உன்
இடை தனிலே…
பானை
கூலிலும்
பரணி
நெல்லிலும்
உன்
உழைப்பின்
உதிரம் ஒட்டி இருக்கும்.
என் மேனி
நோவு
அடைந்தால்.
உன்
இமையும்
மூடாதம்மா.
என்
வயிற்றை
நிரப்புவதற்கு
உன்
வயிறு
வெயிலில் காயும்.
சொந்தங்கள்
செய்த
அவமானத்தை
தன்மானம்
ஆக மாற்றி
தரணியில் வாழ்ந்தாய்.
உற்சாகம்
தந்ததும்
உத்வேகம்
கொடுத்ததும்
நீயே.
வாழ்க்கை
நெறி
கற்றுத் தந்தாய்…
நான்
வாடிய தருணம்
துணை இருந்தாய்.
இன்றைய பொழுது
இல்லாமல்
இறைவனிடம்
சென்று விட்டாய்.
தாயே…
எல்லாம் வல்ல
அந்த
இறைவன்
இனிய சொர்க்கம்
தர
வேண்டுகின்றேன்.
ஆமீன்.
அன்பு மகன்
அரும்பு கவி
அன்வர் உசேன்
தொருவளூர்.
அஜந்தா டெக்ஸ்டைல்ஸ்
ராம்நாட்.
94438 82820