கவிதைகள் (All)

இருக்க வேண்டியது !!

இருக்க வேண்டியது !!
 
இளமையில் என்னிடம்

படிப்பு இருந்தது

பட்டம் இருந்தது

பணம் இருந்தது

பதவி இருந்தது

வீடு இருந்தது

குடும்பம் இருந்தது

வீரம் இருந்தது

விவேகம் இருந்தது

தெம்பு இருந்தது

திராணி இருந்தது

வசதி இருந்தது

வாய்ப்பு இருந்தது

இறைவனின் நினைப்பு

எப்போதாகிலும் வந்தது!
முதுமையில் என்னிடம்

வயசு இருக்கிறது

அனுபவம் இருக்கிறது

முதிர்ச்சி இருக்கிறது

முயற்சி இருக்கிறது

நோயும் இருக்கிறது

நோவும் இருக்கிறது

வேதனையும் இருக்கிறது

மறதி இருக்கிறது

மந்தம் இருக்கிறது

இறைவனின் நினைப்பு

எப்போதும் இருக்கிறது!!
 நன்றி:தமிழோவியம்.

 
 
அன்புடன்,
இமாம்.
 
http://thamizheamude.blogspot.com/

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button