உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்
உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள் 1.5.2026.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றார்
உலக மகாகவி பாரதியார்.
உழுவார் உலகத்தார்க்கு ஆணியென்று
உரக்கச் சொன்னார் வள்ளுவரும்.
சீரைத் தேடின் ஏரைத் தேடென்று
உயர்வாய் உரைத்தார் ஔவையுமே.
உழவர் இல்லையேல்
உலகோர்க்கு உண்ண
உணவில்லை என்ற
உண்மையை உணர்வோம்.
உழவர் விளைபொருள்களுக்கு
உரிய விலை கொடுத்து அவர் நிலை
உயரச் செய்ய நாம்
உரியதைச் செய்வோம்.
உழவுப் பொருட்கள்,
உபகரணங்கள் மற்றும்
உயரிய விதைகள்
உடன் கிடைக்கச் செய்வோம்.
உழைப்பில்லையேல்
உலக இயக்கமே இல்லை.
உழைப்பவருக்கு
உழைப்பிற்கேற்ற
உரிய பலன்கள்
உடனே கிடைக்க
உரியதைச் செய்வோம்.-அவர்
உழைப்பால் கிடைப்பதில்
உரிய பங்களிப்போம் – அவர்
உரிமைகள் காத்திட
உடன் துணை நிற்போம்.
உழவர் – உழைப்பாளர் வாழ்வு
உயர்ந்திடச் செய்வோம் என்று
உழைப்பாளர் தினமான இன்று
உறுதிமொழி ஏற்போம் .
உழைப்பாளர் அனைவருக்கும்
உளமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்,
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.
