உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
உலக மகளிர் தின வாழ்த்துக்கள்.
தாயாய், தமக்கையாய் , தங்கையாய், தாரமாய்,
தன் பணி செய்பவர் மங்கையரன்றோ.
மகளாய் , மருமகளாய்,
மாண்புகள் சேர்ப்பதும்
மங்கையரன்றோ.
இல்லத்தை நிர்வகிக்கும்
இன்னல் மிகு பணியை
இலகுவாய்ச் செய்வது
மங்கையரன்றோ.
திட்டம் போட்டுப் பணிகளை
தினசரி திறனுடன் செய்வது
மங்கையரன்றோ.
வருவாய்க்கேற்ப செலவினங்களை
வரைமுறை செய்வது
மங்கையரன்றோ.
இக்கணம் மட்டுமல்ல
எக்கணமாயினும்
சிக்கனம் பேணி
அக்கணம் காப்பது
மங்கையரன்றோ.
உருபசியாற்றிட
வெகு ருசியாக
உணவு படைப்பது
மங்கையரன்றோ.
இல்லம் நாடி
இல்லையென வருவோரின்
இன்னல் தீர்ப்பது
மங்கையரன்றோ.
இல்லறம் தன்னை
நல்லறமாக்கி
இன்பம் தருவது
மங்கையரன்றோ .
உறவுகள் பேண
உறு வழி கண்டு
உயர்வாய் நடப்பது
மங்கையரன்றோ.
பள்ளி அறிவிலும்
பட்ட அறிவிலும்
பகுத்தறிவிலும் சிறந்தவர்
மங்கையரன்றோ.
ஆற்றும் கடமையில்
ஆற்றலைக் காட்டி
ஏற்றம் காண்பவர்
மங்கையரன்றோ.
தாய்மை உணர்வு
தரணி முழுவதும்
தழைத்திடச் செய்வது
மங்கையரன்றோ.
மகளிர் இல்லையேல் மனையியல் இல்லை.
மகளிர் இல்லையேல் மனையே இல்லை.
மகளிர் இல்லையேல் மகவுகள் இல்லை.
மகளிர் இல்லையேல் மகிழ்ச்சி இல்லை.
மகளிர் இல்லையேல் மனநிறைவில்லை.
மகளிர் இல்லையேல் மன்பதையே இல்லை.
மகளிரின் பெருமை கூறவும் எளிதோ.
வாழ்க மகளிர் தினம்.
வாழ்க மகளிர் தினமும்.
வாழ்க மகளிர் புகழ்.
வாழ்க , வாழ்கவே.
அன்புடன் வாழ்த்தும்,
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.
8.3.2026.
