மின் பணியாளர்கள் நலச்சங்கம் பத்து ரூபாய் நல இயக்கத்தின் சார்பாக நிதி உதவி!!

மின் பணியாளர்கள் நலச்சங்கம் பத்து ரூபாய் நல இயக்கத்தின் சார்பாக நிதி உதவி!!

தனியார் மின் பணியாளர்கள் நல சங்கம் பதிவு எண்18/2025 VNR, மாநில அளவில் பதிவு செய்த இந்த சங்கத்தின் தமிழ்நாடு மின்கொடி நண்பர்கள் பத்து ரூபாய் நல இயக்கத்தின் உதவியுடன் மாநில அளவில் விபத்தினால் பாதிக்கப்படும் உறுப்பினர்களுக்கு, மாநில அளவில் எலக்ட்ரிசியன்கள் ஆக பணி புரியும் சக தொழிலாளர்களும் இருந்து பெறப்படும் சிறு தொகைகளை பெறபட்டு விபத்தின் சிகிச்சைக்காக ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்பட்டு வருகின்றது, இந்த நிகழ்வில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கொங்கம்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி அவர்களின் மகன் பாண்டி செல்வம் கடந்த 14ஆம் தேதி மதுரையிலிருந்து திருப்பூர் செல்லும் வழியில் இரு சக்கர வாகன விபத்தில் பாதிக்கப்பட்டு கால்களில் காயம் ஏற்பட்டதால் அவரது மருத்துவ உதவிக்காக மாநில பொதுச் செயலாளர் செழியன், மற்றும் மாநில தலைவர் சோமு அவர்களின் பரிந்துரை ஏற்று, தனியார் மின் பணியாளர்கள் நல சங்கத்தின் மாநில பொருளாளர் கதிர்காமன் , மாநில இணைச் செயலாளர் ஜஸ்டின் ஜோசப் நெல்சன், உயர்மட்ட குழு உறுப்பினர் அப்துல் அஜீஸ், மாநில உறுப்பினர் முகமது பத்ருதீன், ஆகியோர் பாதிக்கப்பட்ட பாண்டி செல்வத்தின் இல்லத்திற்கு சென்று அவரது மருத்துவ உதவிக்காக ரூபாய் 10 ஆயிரம் வழங்கி உதவி செய்தார்கள்.




