இராமநாதபுரம்முதுகுளத்தூர்

எஸ் டி பி ஐ கட்சி முதுகுளத்தூர் நகர் சார்பில் கூடுதல் பேருந்து வேண்டி கோரிக்கை மனு !

எஸ் டி பி ஐ கட்சி முதுகுளத்தூர் நகர் சார்பில் கூடுதல் பேருந்து வேண்டி கோரிக்கை மனு !

முதுகுளத்தூர் ஏப்ரல்,30
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் எஸ் டி பி ஐ கட்சி நகர் சார்பில் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து பரமக்குடிக்கு இரவு 10:00 மணி வரை கூடுதல் பேருந்து இயக்கிட வலியுறுத்தி முதுகுளத்தூர் போக்குவரத்து பணிமனை அலுவலகத்தில் கோரிக்கை மனு முதுகுளத்தூர் நகர் தலைவர் காதர் சுல்தான் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.இக்கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,
தற்போது வளர்ந்து வரும் நகரமாக முதுகுளத்தூர் பேரூராட்சி மாறியுள்ள நிலையில் மக்கள் தொகையும் வியாபார நிர்வனங்களும் கனிசமாக அதிகரித்து வருகிறது இந்நிலையில் பரமக்குடி செல்வதற்க்கு இரவு 09:15 மணிக்கு மேல் பேருந்து வசதி இல்லை இதனால் பொது மக்களும் வியாபாரிகளும் அதிக விலை கொடுத்து தனியார் வாகனங்களில் செல்லும் நிலை உள்ளது எனவே இரவு 10 மணிக்கு மேல் முதுகுளத்துரில் இருந்து பரமக்குடி செல்வதற்க்கு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க ஆவணம் செய்யும் மாறு எஸ் டி பி ஐ கட்சி முதுகுளத்தூர் நகர் சார்பாக கேட்டுக்கொண்டனர், இந்நிகழ்வில் எஸ் டி பி ஐ இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேக் முஹம்மது, முதுகுளத்தூர் நகர் பொருளாளர் முஹம்மது இப்றாகிம், நகர் செயற்குழு உறுப்பினர் அஷ்ஹாருதீன், முதுகுளத்தூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் அப்துல் ஹமீது, கிளை நிர்வாகிகள் ஆட்டோ அலி, அப்துல் காதர், மற்றும் முஹம்மது ரியாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button