இராமநாதபுரம்

தேசிய விவசாயிகள் தினம்

செல்வநாயகபுரத்தில் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி
மாணவிகள் விவசாயிகளுக்கு காய்கறி விதைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கினர்.

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூர்
நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சியில் கீழ் விவசாயிகளை சந்தித்து வருகின்றனர்.
இதனடிப்படையில்
முதுகுளத்தூர் அருகே, செல்வநாயகபுரம் கிராமத்தில், தேசிய விவசாயிகள் தினத்தை கொண்டாடும் வகையில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும்
காய்கறிகளின் விதைகள் வழங்கினர்.
இந்நிகழ்சியில்
வேளாண் அதிகாரி தமிழ் அகராதி பங்கேற்று,
விவசாயிகளுக்கு பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தார்.
சுற்றுப்புறத் தூய்மையை பாதுகாக்கும் வகையில்,
விவசாயிகளுக்கு வேப்பமரகன்று மற்றும் நொச்சி மரக்கன்றுகளை வழங்கினர்.மேலும் காய்கறி விதைகளான பாகற்காய் , பீர்க்கங்காய்,= புடலங்காய், தக்காளி , மிளகாய் ஆகிய விதைகளை வழங்கி விவசாயிகள் தினத்தை கொண்டாடினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button