இராமநாதபுரம்
250 கிலோ ஆட்டுக்கறி படையலுடன் பக்தர்களுக்கு விருந்து

250 கிலோ ஆட்டுக்கறி படையலுடன் பக்தர்களுக்கு விருந்து

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம்-தனுஷ்கோடி சாலையில் உள்ள இரட்டை தாழை முனீஸ்வரர் கோவிலில், நம்பு நாயகி அம்மன் ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கத்தின் சார்பாக 250 கிலோ ஆட்டுக்கறி படையலிட்டு, தடபுடலான அசைவ விருந்து வழங்கப்பட்டது. கோதண்ட ராமர் கோவில் அருகே நடந்த இந்நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இவ்விருந்து ஆட்டோ ஓட்டுநர்களின் காவல் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது.



