முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அல்ஹாஜ் அஹமது பஷீர் சேட் ஆலிம் மன்பஈ – அவர்களின் 2026 ஜூன் மாத மலேசிய மார்க்க பயணம் மற்றும் மார்க்க நிகழ்வுகள்

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மற்றும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலாமா சபையின் இராமநாதபுரம் மாவட்டம் கௌரவ தலைவர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஹமது பஷீர் சேட் ஆலிம் மன்பஈ – அவர்களின் 2026 ஜூன் மாத மலேசிய மார்க்க பயணம் மற்றும் மார்க்க நிகழ்வுகள்
செய்திகளை தொகுத்தவர் ,
முஹம்மது ரில்வானுல்லாஹ் முதுகுளத்தூர்.

15-06-26 திங்கள்கிழமை :-
அதிகாலை 07:00மணியளவில் மலேசியா கோலாலம்பூர் விமான நிலையம் வந்தடைந்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ் !
15-06-26 திங்கள்கிழமை :-
சித்தார்கோட்டை -ஐ பூர்வீமாகக் கொண்ட , பினாங்கு மக்களால் இன்றளவும் நேசிக்கப்படும் உஸ்தாத் மௌலானா மௌலவி ஹாஜி முஹம்மது ஹபீப் ஆலிம் மன்பஈ அவர்களின் தம்பி ஹாஜி முஹம்மது ஜமீல் பின் சம்சுத்தீன் அவர்களால் நடத்தப்பட்டு வரும் , கோலாலம்பூர் சிலாயாங்-ல் உள்ள புகழ் பெற்ற IMAM GHAZZALI ARABI MADRASAH – வில் நடைபெற்ற திக்ர் மஜ்லிஸில் மார்க்க உரையாற்றினார்.
17-06-26 புதன் கிழமை:-
மலேசியா பினாங்கு ல் உள்ள DEWAN ALAM INDAH மண்டபத்தில் நடைபெற்ற , மௌலானா மௌலவி ஹாஜி முஹம்மது ஹபீப் ஆலிம் மன்பஈ அவர்கள் எழுதி வெளியிட்ட , கொரோனா காலத்தில் தொடங்கி கிட்டத்தட்ட 300 வார மார்க்க உபதேசங்களின் தொகுப்பான
“ வெள்ளி தோறும் வாழ்க்கை சிந்தனை”
புத்தக வெளியீட்டு பெருவிழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மார்க்க உரை ஆற்றினார்கள். அந்த விழாவில் நமது இமாம் அவர்களின் சிம்மக்குரலில் மார்க்க உரையை முதன்முறையாக செவிமடுத்த மலேசிய பினாங்கு வட்டார மக்கள் ,
அந்த விழாவின் நிறைவில் இமாம் அவர்களை சூழ்ந்து கொண்டு அவர்களை அன்போடு அணுகி நலம் விசாரிக்கையில் ,,
நான் முதுகுளத்தூர் பெரிய பள்ளியின் இமாம் என்று சொல்லக் கேட்டது எல்கையில்லா மகிழ்ச்சி.
எல்லாப் புகழும் வல்ல இறைவனுக்கே !
18-06-26 வியாழக்கிழமை :-
இராமநாதபுரம் பனைகுளத்தை பூர்வீகமாகக் கொண்ட ,
மலேசியா KEDAH SUNGAI PETANI – யில் புகழ் பெற்ற HASANI GROUPS நிறுவனத்தின் chairman HAJI FAROOK HASSAN அவர்களின் வீட்டில் நடைபெற்ற திக்ர் மஜ்லிஸில் பங்கேற்று துஆ செய்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ் !
19-06-26 வெள்ளிக்கிழமை :-
பினாங்கு தலைநகரில் புகழ்பெற்ற MASJID KAPAITAN KELING பெரிய பள்ளிவாசலில் ஜீம்-ஆ தொழுகையில் கலந்து கொண்டார்கள்.
20-06-26 சனிக்கிழமை :-
இராமநாதபுரம் புதுவலசை-ஐ பூர்வீகமாகக் கொண்ட PRESMA என்னும் மலேசியா முஸ்லிம் உணவக சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற , மிகவும் பிரசித்தி பெற்ற RESTAURANT ALIMAJU GROUPS உணவகக் குழுமத்தின் Chairman , DATO HAJI JAWAHAR ALI அவர்கள் தலைமையில், இறைவனின் கிருபையில் கோலாலம்பூரில் மாநகரில் சிறப்புடன் இயங்கி வரும் மலேசியாவின் பிரசித்தி பெற்ற ஹிப்லு மதரஸாவான MAHAD TAHFIZ AL-FARIDIYAH MADRASAH – வில் நடைபெற்ற , மௌலானா மௌலவி ஹாஜி முஹம்மது ஹபீப் ஆலிம் மன்பஈ அவர்கள் எழுதி வெளியிட்ட “ வெள்ளி தோறும் வாழ்க்கை சிந்தனை”
புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு மார்க்க உரை நிகழ்த்தினார்கள்.
21-06-26 ஞாயிற்றுக்கிழமை :-
கோலாலம்பூர் WANGSA MAJU – வில் உள்ள , மர்ஹூம் முதுவை கவிஞர் அல்ஹாஜ் உமர் ஜஃபர் ஆலிம் மன்பஈ அவர்களின் மகனார் வீட்டில் நடைபெற்ற திக்ர் மஜ்லிஸில் தலைமை தாங்கி துஆ செய்தார்கள்.
மேலும், வெள்ளி தோறும் வாழ்க்கை சிந்தனை புத்தக வெளியீட்டு விழாவுக்கு தலைமை ஏற்க வருகை தந்த இராமநாதபுரம் தேவிபட்டிணத்தை பூர்வீகமாகக்கொண்ட , புகழ்பெற்ற CELON ARABIC COLLEGE மற்றும் வீரசோழன் ARABIC COLLEGE மதரஸாக்களில் பேராசியராக பணியாற்றி தற்போது இளையான்குடி RASHEEDIYAH ARABIC COLLEGE- ன் முதல்வராக பணியாற்றி வரும் அஷ்-ஷைகு RAZOOK ALIM FAZIL மன்பஈ அவர்களுக்கு விருந்துபசரித்து கௌரவித்தார்கள்.
22-06-26 திங்கள்கிழமை :-
அதிகாலை பஜ்ர் தொழுகையை நிறைவேற்றி விட்டு , மலேசியா JOHOR SEGAMAT- ல் வசித்து வரும் தொழில் அதிபர்களான, நமது முதுகுளத்தூரைச் சேர்ந்த , மைதீன் , ஜாஹிர் குடும்பதினரின் வருகை ஏற்று அவர்ளின் வீட்டில் விருந்தில் கலந்து கொண்டு கோலாலம்பூர் வந்தடைந்தார்கள்.
நாளை 24/06/26 அன்று , கோலாலம்பூரில் வசித்து வரும் முதுகுளத்தூர் மர்ஹீம் ஹாஜி சாலிஹ் அவர்களின் மகனார் சுனைத் அஸ்லம் அவர்களின் இல்லத்தில் நடைபெற இதுக்கும் துஆ மஜ்லிஸ்-ல் கலந்து கொண்ட பின் ,
இன்ஷா அல்லாஹ் ,
25/06/26 வியாழக்கிழமை அன்று தாயகம் திரும்ப உள்ளார்கள்.
அன்னாரின் இந்த மார்க்க பயணத்தை , மார்க்க பணிகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வானா!
அவர்களின் ஆரோக்கியத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ் பரக்கத் செய்வானாக!!
ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன் !!







