இந்திய நூலக தந்தை எஸ். ஆர். அரங்கநாதன் பிறந்த நாள் விழா

பரமக்குடி முழு நேர கிளை நூலகத்தில் 12/08/2026 பகல் 12.30 மணிக்கு இந்திய நூலக தந்தை எஸ். ஆர். அரங்கநாதன் பிறந்த நாள் விழாவில் நூலகர் கோ. சண்முக வேலு அவர்கள் வரவேற்புரையாற்றினார்

நூலக வாசகர் வட்ட தலைவர் திரு. வே. இராஜேந்திரன் அவர்கள் தலைமை உரையாற்றினார்கள் நூலக வாசகர் வட்ட ஆலோசகர் எஸ். ஆர். லட்சுமி நாராயணன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். நூலக பணியாளர் ஐஸ்வர்யா நன்றியுரையாற்றினார்.
இன்னிகழ்வின் முடிவில் M. D. நாகராஜன் நீர்வள ஆதரத்துறை கண்காணிப்பாளர் அவர்கள் ரூ. 5000 நூலகரிடம் செலுத்தி தன்னை பெரும்புரவலராக இணைத்து கொண்டார். கணேசமூர்த்தி அவர்கள் நூலகத்திற்கு சுவர் கடிகாரம் நூலகரிடம் நன்கொடை வழங்கினார்
மேலும் திரு.முதுவை ஹிதாயத் எம். எஸ். சி முதுகுளத்தூர் 51 புதிய நூல்களை வாசகர்கள் பயனுக்காக இலவசமாக வழங்கினார். இவர்களுக்கு பரமக்குடி முழு நேர கிளை நூலகம் சார்பாகவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.













