இராமநாதபுரம்முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் அரசு பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி – அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

முதுகுளத்தூர் அரசு பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி – அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

  இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் காவல்துறை மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஆகஸ்ட் 11-ல் போதையில்லா தமிழகம் நாளை முன்னிட்டு முதுகுளத்தூர் காவல் உட்கோட்டம் சார்பில் பெருந்திரள் போதைப்பொருள் ஒழுப்பு மற்றும் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
முதுகுளத்தூர் காவல் துணைக்கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில், தலைமை ஆசிரியர் சந்தானவேலு, என்.எஸ். எஸ் மாவட்ட தொடர்பு அலுவலர் மங்களநாதன்,
காவல் ஆய்வாளர் சித்திக், சார்பு ஆய்வாளர் முகில் அரசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது அனைவரையும் என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலர் தர்மராஜ் வரவேற்றார்.
பேரணியை காந்திசிலையில்
காவல் துணை கண்காணிப்பாளர்சண்முகம் துவக்கிவைத்தார்.
இப்பேரணியில்
முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்.,
என்.சி.சி, தேசிய பசுமைப்படை, சாரணர் படை மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் எதிர்ப்பு வாசகங்களுடன் கோஷங்களை எழுப்பியவாறு பேருந்துநிலையம் வரை பேரணி சென்றது.பின்பு போதைப்
பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது. பேரணியில்
ஆசிரியர்கள் மணிகண்டன், ரஜியாபானு, அரசகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டனர்,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button