பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி – உதவியாளர் மகாலட்சுமி கைது, ரூ.27,000 பறிமுதல்

பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி – உதவியாளர் மகாலட்சுமி கைது, ரூ.27,000 பறிமுதல்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் தற்போது உதவியாளராக பணிபுரிந்து வரும் திருமதி. மகாலட்சுமி என்பவர், கடந்த 19.06.2026 அன்று சார்பதிவாளர் (பொறுப்பு) ஆக இருந்தபோது பதிவு செய்த விடுதலைப் பத்திரங்களை விடுவிப்பதற்காக முதலில் ரூ.30,000/- லஞ்சம் கேட்டு, பின்னர் ரூ.27,000/- ஆக குறைத்துக் கேட்டதாக புகார் பெறப்பட்டது.
இதன்பேரில், இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று 22.06.2026 அன்று மாலை 6.35 மணியளவில் பொறிவைப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.
குற்றம் சாட்டப்பட்ட அலுவலர் திருமதி. மகாலட்சுமியின் உத்தரவின்பேரில், லஞ்சப் பணம் ரூ.27,000/- ஐ அருகிலுள்ள தனியார் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் திரு. சிக்கந்தர் என்பவர் பெற்றுக் கொண்டார். லஞ்ச ஒழிப்புத் துறையினரால் அவரிடமிருந்து பணம் முழுவதும் கைப்பற்றப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட அலுவலர் திருமதி. மகாலட்சுமி கைது செய்யப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்,




