இராமநாதபுரம்

பசும்பொன் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது

பசும்பொன் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பசும்பொன் ஊராட்சியில், தேவர் ஆலயம் செல்லும் வழித்தடத்தில் 300 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளத்தை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு. எம். சிவகுரு பிரபாகரன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் தாசில்தார் முருகேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், ஆணையாளர் மேகராஜ், தொழில்நுட்ப உதவியாளர் அய்யனார், பொய்யாமொழி ஊராட்சி செயலர் எம். சக்தி முருகன், உதவி பொறியாளர் அண்ணபூரணா தேவி, தோட்டக்கலை உதவி இயக்குநர் ராகேஷ், ஒன்றிய மேற்பார்வையாளர் பிரபாகரன், அலுவலக உதவியாளர் சிவசுந்தரலிங்கம், மருது உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பசுமை வளத்தை அதிகரித்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த மரக்கன்று நடும் திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button