இராமநாதபுரம்

புதிய பேருந்துசேவை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர் . .

புதிய பேரூந்துசேவை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர் . .

ராமநாதபுரம் :

இராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினம் தெற்கு புதுக்குடியிருப்பு பகுதி மக்களின் நீண்டநாள் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் . ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்த புதிய அரசு பேருந்து சேவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டது.


இந்நிகழ்வில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் Dr. V.K. ராஜீவ் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் . பெ. மதன் ராஜா மற்றும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் . மா. சிவகுரு பிரபாகரன், ஆகியோர் இணைந்து புதிய பேருந்து சேவையை தொடங்கிவைத்தனர்.


தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பொதுமக்களுடன் இணைந்து பேருந்தில் பயணம் மேற்கொண்டு, புதிய சேவையால் அப்பகுதி மக்களுக்கு கிடைக்கும் பயன்கள் குறித்து கலந்துரையாடினர்.


இந்த புதிய பேருந்து சேவையின் மூலம் பெரியபட்டினம் தெற்கு புதுக்குடியிருப்பு பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது அப்பகுதியின் போக்குவரத்து வசதியும் மேலும் மேம் படுத்த பட்டுள்ளது. இந்த பகுதி பொதுமக்கள் முதல்வர் விஜய்க்கு தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button