கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் களம் காண முடிவு!!

கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் களம் காண முடிவு!!

செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் செயற்குழு கூட்டம் முஜிபு ரகுமான் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தலைவர் பஷீர், செயலாளர் சர்பிராஸ் நவாஸ், பொருளாளர் பரூஸ், துணை செயலாளர் நைனா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சேகு சதக், பவுசுல் அமின், நசுருதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் நீண்ட நாள் கோரிக்கைகள் கீழக்கரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தாலுகா நீதிமன்றம், துணைநிலை கருவூலம், சொந்த கட்டிடத்தில் அறிவுசார் மையம் மற்றும் நவீன நூலகம் அமைக்க வேண்டி, மாவட்ட ஆட்சியரிடம் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் அலாவுதீன் ஆலோசனைப்படி மனு அளிப்பது,
மேலும் நிர்வாக முடிவுகள் சங்க பதிவை புதுப்பிப்பு செய்வது, வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்பது குறித்து விவாதிக்கப்பட்டது.நிர்வாக வசதிக்காக செயல் தலைவராக முகம்மது அஜிஹர் உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்,புதிதாக பதவியேற்ற மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சரை சந்தித்து, ஊரின் முக்கிய அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரிக்கை வைப்பது,சங்க வளர்ச்சிக்கு
சந்தா வசூலை தீவிரப்படுத்துவது மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தின் இறுதியில் துணை தலைவர் சுபைர் நன்றி உரை நிகழ்த்தினார். செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் அனைத்து தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.




