முதுகுளத்தூரில் பிரபல பிளாக்செயின் தொழில்நுட்பம் மற்றும் கிரிப்டோ துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி

முதுகுளத்தூரில் பிரபல பிளாக்செயின் தொழில்நுட்பம் மற்றும் கிரிப்டோ துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள தனியார் திருமண மஹாலில் செப்,28 அன்று வளர்ந்து வரும் பிரபல டிஜிட்டல் துறையான பிளாக் செயின் மற்றும் கிரிப்டோ விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் அத்துறை வல்லுநர் திரு. நாக பிரவீன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டிஜிட்டல் தொழில் நுட்ப துறை தொடர்பான தகவல்கள் மற்றும் வாய்ப்புகளை விரிவாக விவரித்தார். மேலும், திரு. ஜஹாங்கீர் அக்பர், திரு. முஹம்மது ஹுஸைன் அவர்கள் கிரிப்டோ துறை சார்ந்த தங்களது அனுபவங்களை பகிர்ந்தர்கள் மேலும் சாதனையார்களுக்கு நினைவுப் பரிசு, மற்றும் சால்வை அணிவித்து கெளரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஏற்பாட்டை பக்ருதீன் அலி அஹமது சிறப்பாக செய்திருந்தார்.இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கிரிப்டோ துறை வல்லுநர்கள்யிடம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தகவல்களை கேட்டறிந்தார்கள்.






