இராமநாதபுரம்முதுகுளத்தூர்

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க கூட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தில் முதுகுளத்தூர் வட்ட பேரவை அன்று 13.6.2026 முதுகுளத்தூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.


கூட்டத்திற்கு வட்டத் தலைவர் திரு என்.வீரபத்திரன் தலைமை தாங்கினார். வட்ட துணைத் தலைவர் திரு. பி. ராமசாமி அனைவரையும் வரவேற்றார்.
சங்கத்தின் மாவட்ட செயலாளர் திரு பி.எஸ்.விஜயராகவன் துவக்க உரை ஆற்றினார்.

செயலர் மற்றும் பொருளாளர் அறிக்கையினை வட்ட செயலாளர் திரு எச். ஹாஜா நஜ்முதீன் சமர்ப்பித்தார். விவாதத்திற்கு பின் அறிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

பேரவையை நீ.ராமகிருஷ்ணன், முதுகலை ஆசிரியர் (ஓய்வு) மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பிச்சை ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

மாவட்டத் துணைத் தலைவர் திரு கே சிவனுபூவன் நிறைவுறையாற்றினார்.

பேரவையில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  1. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
  2. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு திட்டக் குறைபாடுகளைக் களைந்து அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  3. முதுகுளத்தூர் நகரில் அடிக்கடி ஏற்படும் மின் தடையை சரி செய்ய வலியுறுத்தி தீர்மானம் இயற்றப்பட்டது. முடிவில் திரு என்.பாலகிருஷ்ணன் காவல்துறை ஓய்வு நன்றி கூறி பேரவை இனிதே முடிவுற்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button