இராமநாதபுரம்
பரமக்குடி பள்ளிக்கூடத்துக்கு சீர்வரிசை வழங்கிய பெற்றோர்கள்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஆர்சி யாதவா தொடக்கப்பள்ளி என்ற அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 323 மாணவ, மாணவிகள் 15 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சீர்வரிசையாக வழங்கினர். சீர்வரிசை கொண்டு வந்த பெற்றோர்களை ஆராத்தி எடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். பிளாஸ்டிக் சேர்கள், மர நாற்காலிகள், கணினி, பிரிண்டர், நோட்டு புத்தகங்கள், மின்விசிறி, மின்விளக்குகள் உள்ளிட்ட மூன்று லட்சம் மதிப்புள்ள பொருட்களை சீர்வரிசையாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளியின் தாளாளர் இருதயராஜ், தலைமை ஆசிரியர் தெரசாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





