மூக்கையூர் மீன்பிடித் துறைமுகத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் ஆ. ஸ்ரீநாத்

மூக்கையூர் மீன்பிடித் துறைமுகத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் ஆ. ஸ்ரீநாத்

கடலாடி :
இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மூக்கையூரில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ. ஸ்ரீநாத் மூக்கையூர் மீன்பிடித் துறைமுகத் தளத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மீன்பிடித் துறைமுகத்தின் தற்போதைய செயல்பாடுகள், மீனவர்கள் பயன்படுத்தும் வசதிகள், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் விரிவாக கேட்டறிந்தார். மேலும், துறைமுக வசதிகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பாக தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.
ஆய்வின்போது இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா. சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., உடனிருந்து ஆய்வில் பங்கேற்றார். துறை சார்ந்த உயரதிகாரிகள் மற்றும் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.




