பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கலைக் கல்லூரியில் தீயணைப்புத் துறையின் போலி ஒத்திகை பயிற்சி

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கலைக் கல்லூரியில் தீயணைப்புத் துறையின் போலி ஒத்திகை பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்குட்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கலைக் கல்லூரியில் தீ விபத்து மற்றும் அவசரகால மீட்புப் பணிகள் குறித்த போலி ஒத்திகை பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கமுதி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) நாகநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு, தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், தீயை கட்டுப்படுத்தும் முறைகள், மீட்புப் பணிகள் மற்றும் முதலுதவி குறித்த செயல்விளக்கப் பயிற்சிகளை மாணவர்கள் மற்றும் கல்லூரி பணியாளர்களுக்கு வழங்கினர்.
இந்தப் பயிற்சியின் மூலம் அவசரகாலங்களில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டது.




