இராமநாதபுரம்முதுகுளத்தூர்

முதுகுளத்தூரில் நிறைவடைந்த கோடைக்கால மார்க்க விளக்க வகுப்பு

முதுகுளத்தூரில் நிறைவடைந்த கோடைக்கால மார்க்க விளக்க வகுப்பு

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாத்தின் ஆதரவுடன், ஹிம்மதுல் இஸ்லாம் வாலிபர் சங்கம் சார்பாக கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி துவங்கப்பட்ட நமது கோடைகால மார்க்க விளக்க வகுப்புகளின் நிகழ்ச்சி இன்று மே 26 ஆம் தேதி இனிதே நிறைவுற்றது.

இதில் நமது பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் காதர் முஹைதீன் தலைமை ஏற்க,
ஹிம்மதுல் இஸ்லாம் வாலிபர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
தலைமை இமாம் பஷீர் சேட் ஆலிம் வாழ்த்துரை வழங்க,
சங்கத்தின் தணிக்கையாளர் அப்துல்லா ஹசன் கனி வரவேற்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு அழைப்பாளராக ஆசிரியர் அக்பர் பாதுஷா மன்பயி, பரமக்குடி சிறப்புரை ஆற்றினார்.
ஒரு மாத காலத்தில் மார்க்கம் பயின்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு இனிதே நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சியில் நமது ஜமாத்தின் முன்னாள் தலைவர் எம் எம் கே எம்.காதர் மைதீன், ஜமாத் நிர்வாகிகள், கல்வி குழு தலைவர் மற்றும் நிர்வாகிகள் இனிதே கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் மார்க்க விளக்க வகுப்புகளில் பயின்ற மானாக்கர்களுக்கு பரிசுகளை வழங்கிய சென்னை கிளை ஜமாத் தலைவர் மற்றும் நிர்வாகிகள், மாணாக்கர்களின் அன்றாடம் சிற்றுண்டி தேவைகள் மற்றும் இமாம்களின் சிறப்பு ஊதியத்திற்கு உதவி செய்த நமது வெளிநாடு வாழ் முதுகுளத்தூர் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள், மற்றும் இந்த மார்க்க நிகழ்ச்சி வகுப்புகளுக்கு நன்கொடைகளை வழங்கி உதவி செய்த பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாத் நிர்வாகிகள் மற்றும் நமது சமுதாயத்தைச் சார்ந்த அனைவருக்கும் நன்றி நல்கியோதோடு நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button