இராமநாதபுரம்

காவல் கண்காணிப்பாளர் உடன் சந்திப்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் துறையின் சமூக அக்கறை மற்றும் மக்களுடன் நேரடி தொடர்பை நிலைநாட்டும் வகையில், “உங்கள் ஊரில் உங்கள் எஸ் பி என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் அவர்கள் உச்சிப்புளி அருகேயுள்ள பெருங்குளம் கிராமத்தை நேரில் பார்வையிட்டு, அங்குள்ள பொதுமக்கள், முக்கிய தலைவர்கள் மற்றும் இளைஞர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவன் முகமது இர்பான் அலிக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்கள். மேலும், பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் குறைகளை கவனமாக கேட்டு, அவற்றின் தீர்வுக்கான வழிமுறைகள் குறித்து பரிசீலனை செய்து, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு தேவையான வழிகாட்டு ஆலோசனைகளை வழங்கினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button