இராமநாதபுரம்

திருவாடானை பேருந்து நிலையத்தில் தாய், மகன் மீது கொடூர தாக்குதல் – 6 பேர் கைது

திருவாடானை பேருந்து நிலையத்தில் தாய், மகன் மீது கொடூர தாக்குதல் – 6 பேர் கைது!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பேருந்து நிலையத்தில் முன்விரோதம் காரணமாக தாய் மற்றும் மகன் மீது ஒரு கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து 6 பேரை கைது செய்துள்ளனர்
திருவாடானையைச் சேர்ந்த நாகவல்லி மற்றும் அவரது மகன் மகாலிங்கம் ஆகியோர் பேருந்து நிலையத்தில் இருந்தபோது, முன்விரோதம் காரணமாக எதிர்தரப்பைச் சேர்ந்த சிலர் அவர்களுடன் தகராறில்ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில்,கும்பலைசேர்ந்தவர்கள் தாய் மற்றும் மகன் இருவரையும் கட்டைகள் மற்றும் மரக்கம்புகளால் தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் இருவரும் காயமடைந்தனர். இந்த சம்பவம் அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தாக்குதலில் காயமடைந்த நாகவல்லி மற்றும் மகாலிங்கம் ஆகியோர் மீட்கப்பட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் அடிப்படையில் தாக்குதலில் தொடர்புடைய 6 பேரை கைது செய்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம் போன்ற இடங்களில் கும்பலாக தாக்குதல் நடத்துவது சட்டம்-ஒழுங்குக்கு சவாலாக கருதப்படுவதால், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது பொருத்தமான குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button