இராமநாதபுரம்

என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

ராமநாதபுரம் மாவட்ட நாட்டுநலப் பணித்திட்டம் (என்.எஸ்.எஸ்.) சார்பில் பள்ளி என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர்களுக்கான ஒருநாள் புத்தாக்கப் பயிற்சி, முதன்மைக் கல்வி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் கர்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட தொடர்பு அலுவலர் மங்களநாதன் வரவேற்றார்.

பயிற்சியில், என்.எஸ்.எஸ். திட்ட செயல்பாடுகள் மற்றும் மாணவர்களிடையே சமூகப் பொறுப்புணர்வை மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 45 பள்ளி என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில், உதவி மாவட்ட தொடர்பு அலுவலர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button