கீழக்கரையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இளைஞர்கள் இணைப்பு

கீழக்கரையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இளைஞர்கள் இணைப்பு

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இளைஞர்கள் புதிதாக இணைந்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படியும், கழக பொதுச் செயலாளரும் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்த் MLA வழிகாட்டுதல்படியும்,நிகழ்ச்சி நடைபெற்றது.
இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் மலர்விழி ஜெயபால் வழிகாட்டுதலின்படி, கீழக்கரை நகர் செயலாளர் ஆசிக் ரஹ்மான் தலைமையில் இளைஞர்கள் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் இணைச் செயலாளர் பரோஸ்கான், பொருளாளர் சித்திக், துணைச் செயலாளர் ஆயிஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடத்தப்படும் என்றும், நகரின் வளர்ச்சிக்காகவும் இளைஞர்களின் நலன் கருதியும் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகர் செயலாளர் ஆசிக் ரஹ்மான் உறுதியளித்தார்.




