புதிய ஆட்டோ ஸ்டேண்ட் திறப்பு விழா

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் உள்ள பட்டாணியப்பா ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கம் சார்பில் புதிய ஆட்டோ ஸ்டேண்ட் திறப்பு விழா பட்டாணியப்பா சாலை சந்திப்பில் நடைபெற்றது .இவ்விழாவில் கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பின் கௌரவ தலைவர் சதக் அப்துல் காதர் ஆட்டோ ஸ்டேண்டை திறந்து வைத்தார்,கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு தலைவர் ஹாமீத் இப்ராஹிம் முன்னிலை வகித்தார், மற்றும் அஹமது காமில் கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு, செயலாளர் சேக் உசேன்,கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

ஆட்டோ ஓட்டுநர்களின் நலனை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த ஆட்டோ ஸ்டேண்ட், பொதுமக்களுக்கு சிறந்த சேவை வழங்கவும், ஓட்டுநர்களுக்கு முறையான வேலை வாய்ப்பை உறுதி செய்யவும் உதவும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சிறப்புமிக்க இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்




