முளைப்பாரி திருவிழா

இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே
சிறுவயல் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முளைப்பாரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் முளைப்பாரி திருவிழா கடந்த வாரம் தொடங்கி தினமும் இரவு பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து கும்மியாட்டம், ஆண்கள் வேஷ்டி சட்டை அணிந்து ஒயிலாட்டம் என சிறப்பாக நடைபெற்றது. இறுதிநாளில் வானவேடிக்கைகள் முழங்க பெண்கள் கும்மி அடித்தும், ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் அதன் பின்பு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் விரதம் இருந்து வளர்த்த முளைப்பாரியை கிராமத்தின் முக்கிய வீதிகளில் தலையில் சுமந்து வீதி உலா வந்து அம்மனுக்கு தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். அதன் பின்பு கலை நிகழ்ச்சிகளும், சிறுவர் சிறுமிகளின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவை காண சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூடியிருந்து விழாவை கண்டு ரசித்தனர்.





