முதுகுளத்தூரில் தவெக-க்கு மாஸ் என்ட்ரி ஒரே நாளில் 500 பேர் கட்சியில் இணைந்தனர்

முதுகுளத்தூரில் தவெக-க்கு மாஸ் என்ட்ரி ஒரே நாளில் 500 பேர் கட்சியில் இணைந்தனர்

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஒன்றியத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இணைந்தனர்.
கீழ மானங்கரையை சேர்ந்த ஜெயகாந்தி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமிழக வெற்றி கழகத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் மதன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சி தொடக்கமாக காக்கூர் சாலையில் கட்சிக் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் மதன்கலந்து கொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.
இதையடுத்து தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்சியில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
பிரமுகர்கள் கலந்து கொண்டனர்
குறிப்பாக ஏராளமான பெண்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கட்சியில் கொண்டு கட்சியில் இணைந்தனர்.
நிகழ்சியில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட பொருளாளர் கிஷோர், பேரூர் கழகம் பூமிநாதன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும், நிகழ்சியில் பங்கேற்ற அனைவருக்கும் ஏற்பாட்டாளர் ஜெயகாந்தி சார்பில் அசைவ உணவு வழங்கப்பட்டது.
முதுகுளத்தூர் ஒன்றியத்தில் ஒரே நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.




