தங்கச்சிமடத்தில் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் முகாம்: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தங்கச்சிமடத்தில் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் முகாம்: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

இராமநாதபுரம் தெற்கு மாவட்டம், தங்கச்சிமடம் கிளையில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் மற்றும் (Counseling) ஆலோசனைக் கருத்தரங்கம் தவ்ஹீத் அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
TNTJமாநிலச் செயலாளரும், கல்வியாளருமான சகோ. அல்அமீன் BE, LLB அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தைத் திட்டமிடும் வகையில், உயர்கல்விக்கானப் படிப்புகள் மற்றும் சிறந்த கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பது குறித்து விரிவாக தெளிவுரையை வழங்கினார்.
அரசுத்துறையில் தடம் பதிப்பது எப்படி?
கிளை துணைச் செயலாளரும், உயர்கல்வித் துறை ஆலோசகருமான சகோ.செய்யது அகமது முஸ்தபா (BE Mech) (Dept of Higher Education) அவர்கள், மத்திய-மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் மற்றும் அரசுத் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளை மாணவர்கள் எவ்வாறு எளிதாக அணுகுவது என்பது குறித்த முக்கிய உத்திகளை விளக்கினார்.
பெற்றோர்களின் பங்களிப்பு
மாவட்ட துணைச் செயலாளர் சகோ.S.பாரூக் DISC, BA History அவர்கள், மாணவர்களின் கல்வித் தேடலிலும், அவர்களின் இலக்குகளை அடைவதிலும் பெற்றோர்கள் எவ்வாறு உறுதுணையாகவும் வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும் என்பது குறித்துப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இவ்வுயர்கல்வி வழிகாட்டி முகாமில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.




