கமுதியில் புரட்சியாளர்கள் தினம் அனுசரிப்பு

கமுதியில் புரட்சியாளர்கள் தினம் அனுசரிப்பு
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள தேவர் சிலை முன்பாக கமுதி தாலுகா மறவர் சங்கத்தின் சார்பில் இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும்பங்கு வகித்த ஆப்பநாட்டு விடுதலை போராட்ட மாவீரர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
1799 ம் ஆண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்து போர்புரிந்து பின்னர் தூக்கிலிடப்பட்ட சேதுபதி மன்னர் தளபதிகள் சித்திரங்குடி மயிலப்ப சேர்வைக்காரர் மீனங்குடி சகோதரர்கள் முத்துகருப்பதேவர் கனக சபாபதித்தேவர் மற்றும் இந்திய தேசிய ராணுவத்திற்கு ஆதரவாக செயல்பட்டு இரண்டாம் உலகப்போர் காலத்தில் 6 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ஆப்பநாட்டு சுதந்திர போராட்ட தியாகிகள் சாயல்குடி து.லா சசிவர்ணதேவர் தூரி ரா ராமசாமிதேவர் ஆகியோர்களின் தியாகத்தை போற்றும் மாலை அணிவித்து மலர்கள் தூவி வீர வணக்கம் செலுத்தப்பட்டது நிகழ்ச்சிக்கு கமுதி தாலுகா
மறவர் சங்க தலைவர் பெ.செல்லத்தேவர் தலைமையில் செயலாளர் கே. ராமமூர்த்தி பொருளாளர் கி.முத்து கு.இராமர் முன்னாள் செயலாளர் கணேசன் ஆசிரியர் (ஓய்வு) பொருளாளர் செல்லபாண்டியன் முத்துராமலிங்கம் கே.டி.என் மருதுபாண்டியன்உயர்மட்ட குழு உறுப்பினர்கள் வே.மாயகிருஷ்ணன் மு.வெள்ளைப்பாண்டியன் நிர்வாகிகள் எஸ்.கே.தேவர் முருகன் பார்வர்ட் பிளாக் கட்சி ஒன்றியச் செயலாளர் திருக்குமரன் உத்திரசெல்வன் வீரபாண்டி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
முன்தாக சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைகாரர் வாரிசுகள் அனைவரும் மரியாதை செய்யப்பட்டது பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
விழாவிற்காக ஏற்பாடுகளை ஆப்பநாடு வரலாற்று ஆய்வு குழுவினர் செய்தனர்.





