பொதுத்துறை வங்கிகள் தடுமாறுவது ஏன்??

பொதுத்துறை வங்கிகள் தடுமாறுவது ஏன்??

யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா எமனேஸ்வரத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.
குறிப்பாக கைத்தறி நெசவாளர்களின் ஜவுளி வணிகத்திற்கு ஒரு காலத்தில் துணையாக நின்ற தேசிய மயமாக்கப்பட்ட வங்கி இது.
பழம்பெரும் வங்கி என்பதால் பழமை மாறாமல் அப்படியே கணினி யுகமான இன்றைக்கும் தொடர்ந்து இயங்கி வருவது தான் வேதனையாக உள்ளது.
பரமக்குடியில் இருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அல்லது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இந்த வங்கிகள் வைகை ஆற்றை கடந்து போனால் வந்துவிடும்.
ஆனால் கலெக்ஷனுக்காக UBI ல் காசோலையை கொடுத்தால் 12 நாட்கள் தொடங்கி 15 நாட்கள் ஆகின்றன.
இன்றைய பிரதமரோ டிஜிட்டல் மயமாகிவிட்டது இந்தியா…
ரொக்கம் காசில்லாத பரிவர்த்தனை என்கிற வகையில் இந்தியா முன்னேறி வருகிறது என்று செல்லும் இடமெல்லாம் பேசுகிறார்.
ஆனால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி யான யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் அதற்கான வசதி ஏற்படுத்தாமல் பணியாளர்கள் இல்லாமல் காசோலை பரிவர்த்தனையில் முடங்கி இருக்கிறது.
வேறு வங்கியின் காசோலை ஒருவர்
எமனேஸ்வரம் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வழங்கினால் அந்தக் காசோலை பணமாவதற்கு 13 நாட்கள் ஆகின்றது. அல்லது 15 நாட்கள் ஆகின்றது என்றால் இந்த வேதனையை யாரிடம் போய் சொல்வது …
இதே பரமக்குடியில் பல தனியார் வங்கிகள் காசோலை கொடுத்த மறுநாள் பணமாகி வரவாகிறது.
ஒருவேளை தனியார் வங்கியை மேலும் ஊக்கப்படுத்த இந்தத் திட்டமா? தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் எல்லாம் இழுத்து மூடி விட வேண்டும் என்கிற வகையில் செயல்படுகிற மறைமுகத் திட்டமா என்று தெரியவில்லை.
வங்கிப் பணியாளர்கள் ஊதியம், நிர்வாகச் செலவுகள் உட்பட அனைத்து செலவுகளையும் பல கோடி வங்கி வாடிக்கையாளர்களிடமே சேவைக் கட்டணம் என்கிற வகையில் பெற்று விடுகிறார்கள்.
ஆனால் அந்தச் சேவை ஏன் தனியாருக்கு நிகராக செல்லவில்லை என்பதுதான் கேள்வி?
இன்றைய கணினி யுகத்தில் காசோலை கொடுப்பவருடைய கணக்கில் பணம் இருக்கிறதா இல்லையா என்று தெரிந்து கொள்ள இரண்டு நிமிடங்கள் போதும்.
இருக்கிறது என்றால் அந்த வங்கியுடன் தொடர்பு கொண்டு உடனடியாக பணத்தை மாற்றி விடலாம். அப்படித்தான் தனியார் வங்கிகள் செயல்படுகின்றன தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் நிலை தான் பரிதாபமாக உள்ளது.
பாரத் மாதா கி ஜெய் என்று உரக்க கூறினால் மட்டும் போதாது தேச உடமையாக்கப்பட்ட வங்கிகள் பாதுகாக்கப்பட வேண்டும் ஒரு வழியாக பிஎஸ்என்எல் தொலை தொடர்பு துறையை ஒழித்தாகிவிட்டது. ஒரே ஒரு நபரிடம் அதானி குழுமத்திடம் இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களும் செல்பேசி மூலம் அடிமையாகிக் கிடக்கிறார்கள்.
தற்போது vodafone நிறுவனமும் அதனுடைய வாழ்நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது. மீண்டும் இந்தத் தேசம் தனியார் வசமாகி அந்தத் தனியார் பன்னாட்டு வர்த்தகத்துடன் தொடர்பு கொண்டு இந்தியாவை அடிமைப்படுத்திய வரலாறு திரும்புகிறதா?? இந்தத் தேசத்தின் மீது உண்மையான பற்று கொண்டவர்கள் சிந்திக்க வேண்டிய காலம் இது.
நீ சு பெருமாள்
பரமக்குடி




