இராமநாதபுரம்

நுங்குவிற்பனை அமோகம்

நுங்குவிற்பனை அமோகம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, திருப்புல்லாணி மற்றும் சாயல்குடி கமுதி பெருமாள்கோவில் பகுதிகளில் பனை மரங்கள் அதிகம் உள்ளன. பனை மரத்தின் அனைத்து பொருட்களும் பயன் தரும் நிலையில் கோடைகாலத்தில் கிடைக்கக்கூடிய நுங்கு சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.ஏப்., முதல் மூன்று மாதங்களுக்கு நுங்கு சீசன் உள்ளது. நுங்கு சாப்பிடுவதால் உடல் வெப்பத்தை தணித்து குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். இதில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் நாவிற்கு வறட்சி வராமல் பாதுகாக்கும். இவற்றில் வைட்டமின்களும் தாதுக்களும் உள்ளன.
தோல் பகுதியில் உள்ள துவர்ப்பு செரிமானத்திற்கு நல்லது. உடல் சோர்வையும் குறைக்க உதவுகிறது. இதனால் இந்த பகுதிகளில் நுங்கு விற்பனை களைகட்டி உள்ளது. 7 முதல் 8 எண்ணிக்கையிலான நுங்குகள் ஏரியாவிற்கு தகுந்தமாதிரி ரூ.40 முதல் ரூ. 50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button