இராமநாதபுரம்

லஞ்சம் வாங்கிய பரமக்குடி தாலுகா வேந்தோணி V.A.O கைது !!!

லஞ்சம் வாங்கிய பரமக்குடி தாலுகா வேந்தோணி V.A.O கைது !!!

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவை சேர்ந்த புகார்தாரர் வேந்தோணி கிராமத்தில் உள்ள ஒரு இடத்தை தனது தாயார் பெயரில் கடந்த 20.11.2025 ஆம் தேதி பரமக்குடி சார்பதிவகத்தில் கிரையம் செய்துள்ளார். மேற்படி சொத்திற்கு புகார்தாரர் தனது தாயார் பெயரில் பட்டா பெயர் மாறுதல் சம்மந்தமாக வேந்தோணி VAO கருப்புசாமி (58/25) என்பவரை கடந்த வாரம் சந்தித்து விவரம் கேட்ட போது VAO கருப்புசாமி பட்டா மாறுதல் செய்ய எனது லாகினுக்கு வரவில்லை வந்தவுடன் செல்கிறேன் என மனுதாரரின் போன் நம்பரை வாங்கியுள்ளார்.

பின்பு சில நாள்கள் கழித்து மனுதாரரின் போன் நம்பருக்கு பட்டா பெயர் மாறுதலாகி விட்டதாக மெசேஜ் வந்துள்ளது. பின் வேந்தோணி VAO மனுதாரருக்கு போன் செய்து நேரில் வந்து தன்னை பார்க்குமாறு மனுதாரிடம் கூறியுள்ளார்.
அதன்பின்பு சில நாள்கள் கழித்து மனுதாரர் VAOஐ நேரில் சந்தித்து விவரம் கேட்ட போது VAO மனுதாரரிடம் நான் பரிந்துரை செஞ்சதால் தான் உங்க அம்மா பெயரில் பட்டா கிடைச்சது எனவே தனக்கு ரூ. 15000/-ம் கொடுக்க வேண்டும் என கரராக கேட்டுள்ளார்.

அதற்கு மனுதாரர் தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என கூறியதற்கு VAO கருப்புசாமி ரூ. 2000/-ஐ குறைத்து நாளைக்கு காலையில் ரூ. 13000/- ஐ தருமாறு கரராக கூறியுள்ளார்.
எனவே லஞ்சம் கொடுக்க விரும்பாத மனுதாரர் இராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலிஸில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு துறை போலிஸார் அவர்களின் அறிவுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய பணம் ரூ.13000/-ஐ VAO கருப்புசாமியிடம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை இன்று (09.12.2025) ஆம் தேதி கையும் களவுமாக பிடித்தனர்.
மேற்படி நபர் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button