இராமநாதபுரம்

பம்மனேந்தல் குருநாத சுவாமி கோவில் 50 ம் ஆண்டு குருபூஜை விழா பால்குட திருவிழா

பம்மனேந்தல் குருநாத சுவாமி கோவில் 50 ம் ஆண்டு குருபூஜை விழா பால்குட திருவிழா
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ குருநாத சுவாமி கோவில் 50 ஆம் ஆண்டு குருபூஜை விழா மற்றும் பெரிய நாச்சியம்மன் கோவில் பால்குட திருவிழா கடந்த
4 -ம் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது
திருவிழாவை முன்னிட்டு, நாள்தோறும் குருநாத சுவாமி மற்றும் பெரிய நாச்சியம்மன், சித்தி விநாயகர், படர்ந்த புலி கற்பக விநாயகர்,கரிசில் குளம் செல்வ விநாயகர்
ஆகிய சுவாமிகளுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாதாரணை நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நாளான நேற்று குருநாதர் சுவாமி ஆலயத்தில் இருந்து பக்தர்கள் அலகு வேல்
குத்தி, சிறுவர்கள் உடலல்
முழுவதும் களிமண் சேறு
பூசி சேத்தாண்டி வேடம் அணிந்து மேலும் 1008 பெண்கள் பால்குடங்களை
தலையில் சுமந்து ஊர்வலமாக மேளதாளம், இசை வாத்தியங்கள், வான வேடிக்கைகள் முழங்க கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக கிராம பரிவார தேவதைகள் சுவாமிகளை வலம் சுற்றி சென்று இறுதியாக பெரியநாச்சி அம்மன் கோவிலை வந்தடைந்தனர்
பின்னர் மூலவர் பெரிய நாச்சி அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும்
சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்புபூஜை நடைபெற்றது இவ்விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள இக்கிராமத்தை 2000 க்கும்
மேற்பட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பம்மனேந்தல் கிராம பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button