துபாயில் தமிழக புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கப்பட்டது

துபாயில் தமிழக புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கப்பட்டது

துபாய் :
துபாயில் தமிழக புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, சதக்கத்துல்லாஹ் அப்பா வளாகத்தில் வரும் 24.12.2025 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு
இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களின் முஸ்னது அஹ்மத் நபிமொழிப் பெருந்தொகுப்பின் தமிழாக்கத்தின் 7 ஆம் பாகம் வெளியீட்டு விழா சென்னை ஆலிம் பப்ளிகேஷன் ஃபவுண்டேஷன் மற்றும் கீழக்கரை உஸ்வத்துன் ஹசனா முஸ்லிம் சங்கம் ஆகியவற்றின் சார்பில் பிரமாண்ட வகையில் வெளியிடப்பட இருக்கிறது.
இந்த விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பிதழை ஆலிம் பப்ளிகேஷன் ஃபவுண்டேஷனின் இயக்குநர் எஸ். அஹ்மது மீரான் முக்கிய பிரமுகர்களிடம் வழங்கினார்.
இதனை ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான், துணைத் தலைவர் கமால், தொழிலதிபர்கள் ஆபித் ஜுனைத், முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப், அதிரை ஷேக் தாவூத் ஆலிம், இலங்கை மௌலவி நிஸ்தர் ஆலிம், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.





