1. Home
  2. முதுகுளத்துார்

Category: முதுகுளத்துார்

முதுகுளத்தூர் தொகுதியில் காங். வெற்றியைக் கொண்டாடிய தொண்டர்கள்

முதுகுளத்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.பாண்டி வெற்றி பெற்றதை திமுக, காங்கிரஸ் கட்சியினர் முதுகுளத்தூர், கடலாடி, கமுதி ஆகிய இடங்களில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.   முதுகுளத்தூர் பேருந்து நிலையம், தேவர்சிலை, சுந்தரலிங்கம் சிலை, காந்திசிலை ஆகிய இடங்களில் திமுகவினரும், காங்கிரஸ் கட்சியினரும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். நிகழ்ச்சியில்,…

மண் சுவர் விழுந்து 6 ஆடுகள் சாவு

முதுகுளத்தூரில் வெள்ளிக்கிழமை காற்றுடன் பெய்த பலத்த மழையில் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து, அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த 6 ஆடுகள் உயிரிழந்தன.    முதுகுளத்தூர் மறவர் தெருவைச் சேர்ந்த முத்துக்கருப்பன் (57). இவர் தனது 6 ஆடுகளை இரவில் வீட்டின் அருகில் கட்டிப் போட்டிருந்தார். அப்போது, இடியுடன்…

சாலையில் நடந்து சென்றவர் பைக் மோதி பலத்த காயம்

முதுகுளத்தூர் அருகே இருசக்கர வாகனம் மோதியதில், சாலையில்  நடந்து சென்றவர் பலத்த காயம் அடைந்தார். தேரிருவேலி அருகே பெரியஇலை கிராமத்தைச்சேர்ந்த முத்து மகன் மூக்கையா(56). இவர் சாலையில் நடந்து சென்ற போது கீழபச்சேரியைச்சேர்ந்த ராஜேந்திரன் மகன் முத்துகிருஷ்ணன் (18) ஒட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியது.  இதில் மூக்கையா…

முதுகுளத்தூர் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

முதுகுளத்தூர், கமுதி, சாயல்குடி பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பிரசாரம் முதுகுளத்தூர் தொகுதியில் கமுதி, சாயல்குடி ஒன்றியங்களில் அதிமுக வேட்பாளர் எம். கீர்த்திகா முனியசாமி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.  கமுதி,சாயல்குடி நகரில் உள்ள வார்டுகளில் பொதுமக்களிடையே அதிமுக வேட்பாளர் எம். கீர்த்திகா முனியசாமி வாக்கு சேகரித்தார். அப்போது, அவருக்கு பொதுமக்கள்…

முதுகுளத்தூரில் முத்திரைப் பதிப்பது யார்?

முதுகுளத்தூரில் முத்திரைப் பதிப்பது யார்? முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக போற்றக்கூடிய பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் பிறந்தவர் என்பது தொகுதியின் தனிச் சிறப்பு.   இத் தொகுதியில் 1952 முதல் 2011 வரை நடைபெற்ற 14 பொதுத் தேர்தல்களில் 2 முறை பார்வர்ட் பிளாக் கட்சியும்,…

முதுகுளத்தூரில் திருநாவுக்கரசர் பிரசாரம்

முதுகுளத்தூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மலேசியா எஸ்.பாண்டியை ஆதரித்து, அக்கட்சியின் மாநில செயலாளர் திருநாவுக்கரசர் புதன்கிழமை வாக்கு சேகரித்தார். முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் அவர் பிரசாரம் செய்தார். அப்போது, திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்துவோம் என தெரிவித்தார். கட்சியின்…

முதுகுளத்தூர் தொகுதி வேட்பாளர் இறுதி பட்டியல்

முதுகுளத்தூர்:  முதுகுளத்தூரில் மொத்தம் 15 பேர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் மற்றும் சின்னங்கள் விவரம்: பி.டி. அரசகுமார் (பா.ஜ.க) தாமரை, எம்.கீர்த்திகாமுனியசாமி (அதிமுக) இரட்டை இலை, பஞ்சாட்சரம் (பகுஜன்சமாஜ்) யானை சின்னம், மலேசியா எஸ்.பாண்டி (காங்கிரஸ்) கை, இருளாண்டி (பாட்டாளி மக்கள் கட்சி) மாம்பழம், பாலகிருஷ்ணன் (அகில இந்திய பார்வர்ட்…

ஸ்ரீதர்மமுனீஸ்வரர் கோயில் மஹா கும்பாபிஷேகம்

முதுகுளத்தூர் அருகே கதையன் கிராமத்தில் உள்ள ஸ்ரீ தர்மமுனீஸ்வரர் கோயில் மஹா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. முதுகுளத்தூர் அருகே கதையன் கிராமத்தின் காவல் தெய்வம் ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, அதிகாலை மங்கள இசை முழங்க விக்னேஸ்வர பூஜை,…

முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் விண்ணப்ப விற்பனை தொடக்கம்

முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பப்படிவம் திங்கள்கிழமை முதல் வழங்கப்படுகிறது. முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் 2016-2017-ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுகின்றன. தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், வணிகவியல், கணிதம், கனிணி அறிவியல் போன்ற பாடங்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுவதாக கல்லூரி…

முதுகுளத்தூர் தொகுதியில் 14 மனுக்கள் நிராகரிப்பு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டிருந்த 29 மனுக்களில், சனிக்கிழமை 14 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்த வேட்பு மனுக்களை சனிக்கிழமை தேர்தல் அலுவலர் ராமையா பரிசீலனை செய்தார். அப்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் 11 பேரது மனுக்களும், 4 சுயேச்சை வேட்பாளர்களது மனுக்களும் என…