பாவேந்தர் பாரதிதாசன்

Vinkmag ad

பாவேந்தர் பாரதிதாசன்
பிறந்தநாள் இன்று

புதுவை தந்த
புரட்சிக் கவிஞன்

புத்துலகு படைக்க
புறப்பட்ட செங்கதிர்

தமிழ்மானம் காத்திட்ட
தன்னிகரில்லா ஏறு

முறுக்கிய மீசை மீது பற்றுக்கொண்ட நறுக்கிய மீசை

போர்க்குரலால் அழித்தான்
தமிழின் மாசை

புரட்சி வறட்சியான போது
செதுக்கிய ஒவ்வோர்
எழுத்துக்குள்ளும் பகுத்தறிவு
திரட்சியானது

தமிழ்ச்சங்கை
முழங்கியவன்

மங்குநிலை
தமிழுக்கு வாய்க்குமெனில்
உயர்த்திப்பிடிக்க தன்னுயிர்
தரத்துணிந்தவன்

இத்தரை மக்களுக்காய்
நித்திரையற்று எழுதிக்குவித்த
பௌர்ணமிச் சித்திரை

நாம் போற்றி மகிழலாம்
இந்த தமிழின் சித்தரை

சமூக அவலங்களை
தமிழ்ச்சாட்டையால்
வெளுத்தவன்

மண்டிய மட இருளையும்
அறிவால் வெளுத்தவன்

உழைக்கும் வர்க்கத்திற்காய்
ஓங்கி ஒலித்த
சிம்மக் குரலோன்

சரிநிகரென பெண்மையை போற்றிய மலரோன்

கூழைக் கும்பிடு போட்டுக் கவிஞனானவனில்லை

ஏழைக்கும்பிட
எரிதழலாய் கொதித்தெழுந்தவன்

பணமாகும் சிலர்
படைக்கும் கவிதைகள்

ரணமாகும் சிலரின்
ரகசிய வரிகள்

கனவாகிப் போகாத
கவிதை உண்டென்றால்

இனமானம் காத்திட்ட
இவன்கவிதை மட்டுந்தான்

பாவேந்தரைப் போற்றுவோம்

தோழமையுடன்
சீனி.சந்திரசேகரன்

News

Read Previous

அடேயப்பா கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?….

Read Next

சுப்ரீம் கோர்ட்டுக்கு இன்று முதல் புதிய இணையதளம்- வழக்கு விசாரணையை நேரலையில் காணலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *