முதுகுளத்தூரில் முத்திரைப் பதிப்பது யார்?

Vinkmag ad

முதுகுளத்தூரில் முத்திரைப் பதிப்பது யார்?


முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக போற்றக்கூடிய பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் பிறந்தவர் என்பது தொகுதியின் தனிச் சிறப்பு.

  இத் தொகுதியில் 1952 முதல் 2011 வரை நடைபெற்ற 14 பொதுத் தேர்தல்களில் 2 முறை பார்வர்ட் பிளாக் கட்சியும், சுயேச்சையில் போட்டியிட்டு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஒருமுறை வெற்றி பெற்றதும் சேர்த்து 4 முறை சுயேச்சையும், ஒரு முறை தமாகா சேர்த்து 3 முறை காங்கிரஸும், ஒரு முறை சுதந்திரா கட்சியும், திமுக 2 முறையும்,அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

  இத் தொகுதியில் பெரும்பான்மையாக தேவர் சமுதாயத்தினரும் அடுத்தபடியாக தேவேந்திரர், யாதவர்கள், முஸ்லிம், கிறிஸ்தவர்களும் உள்ளனர்.

  தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுக, காங்கிரஸ், மதிமுக, பாஜக, பாமக, பார்வர்டு பிளாக் உள்ளிட்ட பிரதான கட்சிகளுடன், நாம் தமிழர்,பகுஜன் சமாஜ் வாதி, தமமுக உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றனர்.  இதில் எம்.கீர்த்திகா முனியசாமி(அதிமுக),மலேசியா எஸ்.பாண்டி(காங்கிரஸ்) இருவருக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவி வருகிறது.

அதிமுக பலம்,பலவீனம்:  அதிமுக வேட்பாளர் எம்.கீர்த்திகா முனியசாமி இத்தொகுதியின் முதல் பெண் வேட்பாளர். தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர் இவர் இரண்டு முறை பரமக்குடி நகர் மன்ற தலைவராக இருந்துள்ளார். இவரது கணவர் முனியசாமி மாவட்ட செயலாளராக இருந்த போது இத்தொகுதிக்கு கட்சி பணியாற்றியது இவருக்கு கூடுதல் பலம். இத்தொகுதியில் இருந்தவர்களுக்கு சீட் கிடைக்காதது அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் எதிராக செயல்படுவது. சமுதாய வாக்குகள் பிரியும் நிலை ஆகியவை பலவீனம்.

திமுக பலம்,பலவீனம்:  கடந்த 2001இல் மக்கள் தமிழ் தேசம் சார்பில் போட்டியிட்டு மிக குறைந்த வாக்குகளான 2,669 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தவர். தற்போது மீண்டும் திமுக கூட்டணி கட்சியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.

இவருடைய யாதவர் சமுதாய வாக்குகள், கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்பு இவரது பலம். அதேநேரத்தில் ஒரு சில இடங்களில் கூட்டணி கட்சிகள் சேர்ந்து தேர்தல் பணியில் தொய்வு இவரது பலவீனம்.

பாஜக: பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பி.டி.அரசகுமார் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர். அதிமுகவுக்குள்ளான ஒருசில இடங்களில் வாக்குகள் பிரியுமே தவிர இவரால் பெரிய மாற்றம் ஏற்படாது.

ஆகவே, இத் தொகுதியில் அதிமுக,காங்கிரஸ் இருகட்சி வேட்பாளர்களும் முழுமையாக  தங்களது சமுதாய வாக்குகளை நம்பியே களத்தில் இறங்கியுள்ளன.

2011 தேர்தலில்…

எம்.முருகன் (அதிமுக) – 83,225

சத்தியமூர்த்தி (திமுக)  – 63,136

News

Read Previous

அன்னையர் தினம்

Read Next

துணைவேந்தர் வ.சுப.மாணிக்கனார் அவர்களின் நூற்றாண்டு விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *