கவினா இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியின் ஆறாவது விளையாட்டு தின விழா

கவினா இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியின் ஆறாவது விளையாட்டு தின விழா

“ஆறாவது விளையாட்டு தின விழா – 2026”
கவினா இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் ஆறாவது விளையாட்டு தின விழா மிகச் சிறப்பாகவும், எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் நடைபெற்றது.
இவ்விழாவில் துபாயைச் சேர்ந்த பத்திரிகையாளர் திரு. முகமது ஹிதாயத்துல்லா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்.
பள்ளித் தலைவர் திரு. கண்ணதாசன் பாண்டியன் அவர்கள் மற்றும் தாளாளர் திருமதி ஹேமலதா கண்ணதாசன் அவர்கள் தலைமை தாங்கினர்.
பள்ளி முதல்வர் திருமதி அனிதா அவர்கள், துணை முதல்வர்கள் திருமதி.ஜோய்ஸ் மற்றும் திருமதி. புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர் அவர்கள் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு வீர விளையாட்டுப் போட்டிகள், உடற்பயிற்சி நிகழ்ச்சிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
மாணவர்கள் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளித் தலைவர் திரு. கண்ணதாசன் பாண்டியன் அவர்கள் மற்றும் தாளாளர் திருமதி. ஹேமலதா கண்ணதாசன் அவர்கள் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினர்.
பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள்,மாணவர்களின் திறமைகளை ஊக்குவித்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்த அனைவருக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
“வெற்றி என்பது பதக்கத்தில் மட்டும் இல்லை; முயற்சியிலும், பங்கேற்பிலும், விடாமுயற்சியிலும் உள்ளது.”
மாணவர்களின் விளையாட்டுத் திறனையும், கலைத் திறனையும் வெளிப்படுத்திய இவ்விழா, அனைவரின் பாராட்டையும் பெற்றது.
அன்புடன்,
கவினா இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகம்




