இராமநாதபுரம்

கீழக்கரையில் மாணவர் – பெற்றோர் கருத்தரங்கம்: புதுக்கிழக்குத் தெரு பொதுநல சங்கம் ஏற்பாட்டில் கல்வி, ஒழுக்கம் வலியுறுத்தி சிறப்புரை – மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு

கீழக்கரையில் மாணவர் – பெற்றோர் கருத்தரங்கம்: புதுக்கிழக்குத் தெரு பொதுநல சங்கம் ஏற்பாட்டில் கல்வி, ஒழுக்கம் வலியுறுத்தி சிறப்புரை – மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு

கீழக்கரை
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதுக்கிழக்குத் தெரு பொதுநல சங்கம் சார்பில் “மாணவர் – பெற்றோர்கள் கருத்தரங்கம்” ஆயிஷா பெண்கள் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அனைத்து சமுதாய கூட்டமைப்பைச் சேர்ந்தஅஹ்மது காமில் தலைமை தாங்கினார்.

புதுக்கிழக்குத் தெரு பொதுநல சங்க தலைவர் சீனி முஹம்மது வரவேற்புரையும், பொருளாளர் முஹம்மது ஃபாரூஸ் நிகழ்ச்சி தொகுப்புரையும் வழங்குகின்றனர். செயலாளர் ஹமீது அபுதாஹிர் நன்றியுரை கூறுகிறார்.

அனைத்து சமுதாய கூட்டமைப்பின் தலைவர் ஹாமீத் இப்ராஹிம், கௌரவ தலைவர் சதக் அப்துல் காதர், செயலாளர் ஷேக் உசேன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி பேராசிரியர் அஹ்மது ஹுசைன் ஆசிப், உம்மு சுலைம் அகாடமியின் ஆலிமா.அனீஸத்து முள்ஹிரா ஸித்தீக்கியா மற்றும் எஸ் டி பி ஐ கட்சி மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ஹமீது ஆகியோர் மாணவர்களின் கல்வி, ஒழுக்கம், எதிர்காலம் குறித்து சிறப்புரையாற்றுகின்றனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் மாணவ, மாணவிகளுக்கு கேள்வி-பதில் போட்டி நடத்தப்பட்டு, சரியான பதில் அளிப்பவர்களுக்கு உடனடி ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது,

இதில் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button