இராமநாதபுரம்தமிழ்நாடு
பிளாக்செயின் கிரிப்டோஅஸெட் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு

பிளாக்செயின் கிரிப்டோஅஸெட் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு

கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகம் மற்றும் முதுகலை வணிகவியல் துறை சார்பாக 08.01.2026 அன்று பிளாக்செயின் மூலம் பரிவர்த்தனை செய்யப்படும் கிரிப்டோஅஸெட்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. வணிகவியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் K. நைனா முஹம்மது வரவேற்றார். கல்லூரி முதல்வர் திரு. S.E.A. ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக துபாய், MSME சான்றிதழ் ஆலோசகர், சர்வதேச டிஜிட்டல் பரிவர்த்தனை திட்டமிடல் ஆலோசகர், முதுகுளத்தூர் ஃபக்ருதீன் அலி அகமது கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இரு அமர்வுகளில் நடைபெற்ற இந்நிகழ்வில் வணிகவியல் துறை மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். இறுதியாக வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் S. நாசர் நன்றி கூறினார்.






