இராமநாதபுரம்

புரட்சி பறக்கும் புத்தக வெளியீட்டு விழா கடலாடி பகுதியில் நடைபெற்றது

புரட்சி பறக்கும் புத்தக வெளியீட்டு விழா கடலாடி பகுதியில் நடைபெற்றது

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கடலாடி கமுதி தாலுகாக்களின் தண்ணீர் பிரச்சனையையும், நீர் மேலாண்மையையும் வெளிப்படுத்தும் விதமாக ஆப்பனூர் ந. இராஜ்குமார் எழுதிய மண்ணறம் நாவல் வெளியீட்டு விழா இராமநாதபுரம் மன்னர் நாகேந்திர சேதுபதி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நமது நிலம் நமதே விவசாயிகள் நலச்சங்கத்தின் தலைவர் திரு குமாரரவிக்குமார் ஐயா, இந்திய கலாச்சார தூதர் செல்வி ஜோதி மலர், நாடக புரட்சி கலைஞர் கலைவேந்தன் கவிராஜ்,இயற்கையாளன் தவம், இதயவனம் இளங்கோவன்,தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு சங்கத்தின் மாவட்ட செயலாளர் தரைக்குடி திரு முத்துராமலிங்கம், சமூக ஆர்வலர் டாக்டர் திரு சாகுல் ஹமீது மற்றும் ஆப்பநாடு இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் சபை ஒருங்கிணைப்பாளர் திரு மனோஜ் அவர்கள் முன்னிலையில் பெரியகுளம் ஆசிரியர் திரு அருணாச்சலம் அவர்கள் புத்தகத்தை வெளியிட RTI ஆர்வலர் இருவேலி ஜாஹிர் உசேன் பெற்றுக்கொண்டார்.இவ்விழாவில் மாற்றத்தை விரும்பக்கூடிய ஏராளமான பொதுமக்களும் விவசாயிகளும், இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button