இராமநாதபுரம்
இராமேஸ்வரத்தில் இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விடுவதை தடுக்க கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்சியரிடம் மனு

இராமேஸ்வரத்தில் இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விடுவதை தடுக்க கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்சியரிடம் மனு

ஆட்டோ ஓட்டுநர்கள் மனு: இராமேசுவரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இந்தச் சங்கத்தினர் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க் கூட்டத்தில் சி.ஆர்.செந்தில்வேல் தலைமையில் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.