இராமநாதபுரம்

ஏர்வாடி தர்ஹா அருகே கோர விபத்து: ஒரே ஊரைச் சேர்ந்த மூன்று நபர்கள் பலி

ஏர்வாடி தர்ஹா அருகே கோர விபத்து: ஒரே ஊரைச் சேர்ந்த மூன்று நபர்கள் பலி

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் ஏற்பட்ட கோர விபத்தில் ஒரே ஊரைச் சேர்ந்த 3 மீனவ இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து சாயல்குடி நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் மீது கார் மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த மீனவர்கள் கணேசன் (25), சஞ்சய் (25), வசந்த் (25) ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர்.

இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சஞ்சய் மற்றும் வசந்த் ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் அவர்களும் உயிரிழந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய காரில் பயணம் செய்த 2 பேரும் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

ஒரே ஊரைச் சேர்ந்த 3 மீனவ இளைஞர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் ஏர்வாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button