இராமநாதபுரம்

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனை:

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனை:

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று மாலை கூட்டு திடீர் சோதனை நடத்தப்பட்டது.

14.07.2026 அன்று மாலை 5.45 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட பெரும்பாலான அலுவலர்கள் அலுவலகத்தில் இருந்தனர்.

சோதனையின் போது அலுவலக அறைகள், முக்கிய பதிவேடுகள், அலுவலர்களின் கைபேசிகள் மற்றும் அலுவலக வாகனங்கள் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இந்த சோதனையில் கணக்கில் வராத பணம், சந்தேகத்திற்கிடமான ஆவணங்கள் அல்லது பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சோதனையின் முடிவில், அலுவலர்களுக்கு ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button