இராமநாதபுரம்

புதிய பேருந்து

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து மானாமதுரை வரை செல்லும் வண்டி எண் 17 மற்றும் ராமநாதபுரம் அரண்மனையிலிருந்து அஞ்சாமடை செல்லும் வண்டி எண் 28 ஆகிய இரண்டு புதிய பேருந்துகளை பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் முருகேசன்
கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் திரு சேது கருணாநிதி, பரமக்குடி வடக்கு நகர கழகச் செயலாளர் ஜீவரத்தினம்,ஒன்றிய கழகச் செயலாளர்கள் சக்தி,அண்ணாமலை மற்றும் கிருஷ்ணமூர்த்தி பொதுக்குழு உறுப்பினர் எஸ் எம் டி கே அருளானந்த்,பரமக்குடி நகர் துணை செயலாளர் மும்மூர்த்தி பரமக்குடி , முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் சேதுபதி மற்றும் மணிமண்ணன் மாவட்ட பிரதிநிதி கோவிந்தன், துணை வணிக மேலாளர் பத்மகுமார் மற்றும் பரமக்குடி கிளை மேலாளர் சிவகார்த்திகேயன், மற்றும் காரைக்குடி மத்திய சங்க பொதுச் செயலாளர் பச்சம்மாள், தொமுச கிளை தலைவர் அர்ஜுனன், தொமுச கிளைச் செயலாளர் மாரிசாமி, தொமுச கிளை பொருளாளர் பாண்டி, மற்றும் நயினார் கோவில் ஒன்றிய பொருளாளர் புலிகேசவன், பரமக்குடி மேற்கு ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் கரைவேல் முருகன், பரமக்குடி நகர் மன்ற உறுப்பினர் பிரபா சாலமன், வார்டு செயலாளர் வீரபாண்டி மற்றும் பரமக்குடி தெற்கு நகர் இளைஞர் அணி துணை அமைப்பாளர் தர்மராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button