இராமநாதபுரம்

காஞ்சிரங்குடி பகுதியில் காவேரி கூட்டுக் குடிநீர் வராததால் மாவட்ட ஆட்சியரிடம் தமுமுக சார்பில் மனு

காஞ்சிரங்குடி பகுதியில் காவேரி கூட்டுக் குடிநீர் வராததால் மாவட்ட ஆட்சியரிடம் தமுமுக சார்பில் மனு

கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி மற்றும் ஊராட்சி பகுதி சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காவேரி கூட்டு குடிநீர் சரியான முறையில் வராததால் மக்கள் குடிநீரை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. இது சம்பந்தமாக அதிகாரியிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த குறையை கவனத்தில் கொண்டு குடிநீர் முறையாக வருவதற்கு துறைசார்ந்த நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் அவர்கள் மக்களின் அடிப்படை வசதிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து செயல் படுத்தி வருகிறார்கள்.ஆனால் இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் அடிப்படை வசதிகள் செயல் படுத்த விடாமல் ஒரு சிலர் திட்டமிட்டு தடுக்கும் நிலை உருவாகியுள்ளது என்றும் இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அவர்கள் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மத்திய மாவட்டத் துணைத் தலைவர் ரைஸ் இப்ராஹிம் மற்றும் காஞ்சிரங்குடி ஊர் இளைஞர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button