இராமநாதபுரம்
பாம்பனில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

பாம்பனில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதால் பாம்பன் கடல் சார்வாரிய துறைமுகம் அலுவலகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டானது ஏற்றப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த வேண்டும் எனவும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




